Description
ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெயில் வைட்டமின் ஈ 11 சதவீதம் உள்ளது. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.
கடலை எண்ணெய் என்பது வேர்க்கடலைச் செடியின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் தாவர எண்ணெய் ஆகும். கடலை எண்ணெயில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை செயலாக்கத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் தென் பகுதியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பெரும்பாலும் இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூட இதயத்திற்கு ஆரோக்கியமான எண்ணெய் என்று கருதுகிறது. ஆனால், அதற்கும் ஒரு குறை இருக்கிறது. என்ன தெரியுமா..?
ஆய்வுகளின்படி, கடலை எண்ணெயில் நான்கு வகைகள் உள்ளன. இதில் சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய், கோல்டு பிரஸ்டு கடலை எண்ணெய் (cold-pressed peanut oil), கார்மெட் கடலை எண்ணெய் (gourmet peanut oil), கலப்படம் செய்யப்பட்ட கடலை எண்ணெய் (peanut oil blends) என நான்கு வகைகள் உள்ளன. அவை அனைத்தும் தாவர எண்ணெயாகக் கருதப்படுகின்றன மற்றும் சமையலிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எண்ணெய் அதிக புகைப் புள்ளியைக் கொண்டுள்ளதால் வறுத்த உணவுக்கு சரியான தேர்வாக இருக்கும். USDA படி, ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெயில் 120 கலோரிகள் உள்ளன. எனவே ஒருவர் அதை சமையலில் 2 டேபிள்ஸ்பூன்களுக்கும், நேரடியாக 1 டேபிள்ஸ்பூன்களுக்கும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அதன் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
அனைத்து வகையான கடலை எண்ணெயும் நல்லதாகக் கருதப்பட்டாலும், வல்லுனர்களின் கூற்றுப்படி, கார்மெட் கடலை எண்ணெய் சாலடுகளில் கலப்பதற்கும் மற்றும் பச்சையாக உண்ணவும் நல்லது என்கின்றனர். ஏனெனில் இது சுத்திகரிக்கப்படாதது மற்றும் சிறப்பு எண்ணெயாகவும் கருதப்படுகிறது. இது குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் ஈ மற்றும் பைட்டோஸ்டெரால்களை வழங்குகிறது. சமையலில் வறுக்க, பொறிக்க சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெய் நல்லதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது எண்ணெயில் சமைக்கப்படும் மற்ற உணவுகளின் சுவையை உறிஞ்சாது. மேலும், இது அதிக புகைபிடிக்கும் புள்ளியைக் கொண்டுள்ளது. இது உணவின் வெளிப்புறத்தை மிருதுவாகவும், உட்புறத்தை மிகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.
Reviews
There are no reviews yet.